Budget 2023: பட்ஜெட்டுக்கு முன்னதாக இந்த பங்குகளின் முதலீடு செய்தால் இலாபம்!

நியூடெல்லி: 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அரசாங்கத்தின் கவனம் மூலதனச் செலவில் இருக்கும் என்று ஷேர்கான் தனது அறிக்கையில் கூறியுள்ளார். PLI திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படலாம். பட்ஜெட்டுக்கு முன், முதலீடுகள் செய்ய உகந்த பங்குகள் என்று ஆக்சிஸ் வங்கி, ஸ்டேட் வங்கி, பிஎன்பி, டாபர் ஆகியவற்றை பங்குச்சந்தை நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். 

பொதுத்தேர்தலுக்கு முன் வரும் கடைசி முழு பட்ஜெட் 

எதிர்வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மோடி அரசின் இரண்டாவது ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். உலகப் பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி வேகமாக நகரும் சூழ்நிலையில், அதன் விளைவு இந்தியப் பொருளாதாரத்திலும் எதிரொலிக்கும். இவ்வாறு சிக்கலான சூழலில், பட்ஜெட்டை தயாரிக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன் பல பெரிய சவால்கள் உள்ள நிலையில், அனைவரின் பார்வையும் பட்ஜெட் அறிவிப்புகள் மீதே உள்ளது. 

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்கள் நடைபெற இருப்பதால், சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படுவதற்கான எதிர்பார்ப்பு குறைவாக இருப்பதாக பட்ஜெட் தொடர்பாக, பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அரசாங்கத்தின் கவனம் மூலதனச் செலவில் இருக்கும், இது வளர்ச்சியை அதிகரிக்கும். அரசு மற்றும் தனியார் முதலீட்டை அதிகரிப்பதே அரசின் முயற்சியாக இருக்கும்.

மூலதனச் செலவு மற்றும் PLI திட்டத்திற்கான நிதியில் சாத்தியமான அதிகரிப்பு
இந்த பட்ஜெட்டில் மூலதனச் செலவு மற்றும் பிஎல்ஐ திட்டத்திற்கான ஒதுக்கீடு அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் (இன்விஐடி) மற்றும் அக்ரி இன்ஃப்ராஸ்ட்ரக்சரில் முதலீடு செய்வதில் வரி விலக்கு அறிவிப்பு சாத்தியமாகும். கிராமப்புற பொருளாதாரத்தை ஆதரிக்க MNREGAக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம்.

கவனம் செலுத்த வேண்டிய துறைகள்

நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவ, அரசின் முழு கவனமும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் இருக்கும். சாலை, எரிசக்தி, நீர், மலிவு விலையில் வீட்டுவசதி உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்கான செலவினங்களை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்த இடங்களில் செலவு செய்வது வேலைவாய்ப்பை உருவாக்க உதவும்.

கிராமப்புற பொருளாதாரத்தை ஆதரிப்பதன் மூலம், வருமானம் பெருகும், நுகர்வு பலப்படும். நுகர்வு மற்றும் வருமானத்தில் முன்னேற்றம் ஆட்டோமொபைல், சிமெண்ட், நுகர்வோர் பொருட்களின் தேவையை அதிகரிக்கும். எனவே, பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள், பட்ஜெட்டுக்கு முன், BFSI, உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட், கட்டுமானம் மற்றும் எரிசக்தி துறை பங்குகளில் முதலீடு செய்வது லாபம் கொடுக்கலாம்.  

பங்குகள்
பட்ஜெட்டுக்கு முன்னதாக பங்குச்சந்தையில் முதலீடு செய்ய உகந்த பங்குகள் இவை:  ஆக்சிஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, எல்&டி, டாபர், எம்&எம், எச்ஏஎல். PNC Infratech, Finolex Cables, APL Apollo, Hi-tech Pipes, Gati, Mahindra Logistics, Macrotech Developers 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.