பெண்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக மாநில மற்றும் மத்திய அரசுகள் பல நல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அந்த வரிசையில் தற்போது பெண்களுக்கான புதிய பொற்கால திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் சிறு வணிகம் செய்வதற்கான கடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 2 லட்சம் வரை கடன் பெற முடியும். வருடத்திற்கு வெறும் 5% வட்டி விகிதத்தில் இந்த கடன் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் கடன் பெறுபவர்கள் பங்களிப்பு எதையும் செலுத்த தேவை கிடையாது. ஒட்டுமொத்த கடன் தொகையும் கொடுக்கப்படுகிறது.
பொதுவாக இதுபோல கடன் திட்டங்களில் குறைந்தது ஐந்து முதல் பத்து சதவீதம் வரை பயனாளிகள் பங்களிப்பு செய்ய வேண்டும். ஆனால், இதில் அது போன்ற நிபந்தனைகள் கிடையாது. இந்த திட்டத்தின் கீழ் 5 சதவீத வட்டியில் இரண்டு லட்சம் கொடுக்கப்படுகிறது.
மற்ற கடன்களின் வட்டி விகிதத்தை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவான வட்டி விகிதம் ஆகும். இந்த கடனை 3 முதல் 5 ஆண்டுகளுக்கு திருப்பி செலுத்துவதற்கான அவகாசம் கொடுக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் பெயர் பெண்களுக்கான புதிய பொற்கால திட்டம் (New swarnima scheme for women)
கடன் பெற விரும்பும் பெண்கள் பிற்படுத்த ப்பட்டோர், சீர் மரபினர் வகுப்புகளை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
இந்த கடன் திட்டத்திற்காக விண்ணப்பிக்க ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை, வருமான சான்றிதழ், சிறு வணிகம் செய்வதற்கான திட்ட அறிக்கை. மேலும், வங்கி கேட்கின்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள மண்டல மேலாளர் அல்லது அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு, வங்கிகள் நகர கூட்டுறவு வங்கிகளின் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரையும் தொடர்பு கொள்ளலாம்.
குறிப்பு : இதில் விண்ணப்பிக்கும் நபரின் ஆண்டு ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் கீழ் இருப்பது கட்டாயம்.