இந்தூர்: ராஜஸ்தானின் கஜ்ரானா பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இம்ரான் என்பவருக்கும் மேட்ரிமோனி மூலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இம்ரானுக்கு ஏற்கனவே 3 திருமணம் நடந்துள்ளதும் குழந்தைகள் இருப்பதும் நான்காவது மனைவிக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு மற்றும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இம்ரான் செல்போனில் திருமண பந்தத்தை முறித்துக்கொள்ளும் வகையில் மூன்று முறை தலாக் என எழுதி நான்காவது மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
திருமண உரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முத்தலாக் தடை செய்யப்பட்டுள்ளதோடு, சம்பந்தப்பட்ட நபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்படும். கணவர் முத்தலாக் கூறியது குறித்து பாதிக்கப்பட்ட பெண் திங்களன்று கஜ்ரானா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில் இம்ரான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.