கனடாவில் ஆபத்தான குற்றவாளி என அறிவிக்கப்பட்ட இளைஞருக்கான தண்டனை விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதிகாலை 2.30 மணிக்கு…
கிட்சனர் நகரை சேர்ந்தவர் பிரயன் டி ல க்ருஸ் (33). இவர் கடந்த 2018ஆம் ஆண்டு அதிகாலை 2.30 மணிக்கு 51 வயது பெண்ணை கழுத்தை நெரித்து வன்கொடுமை செய்திருக்கிறார்.
இச்சம்பவத்தில் மூச்சு திணறிய பாதிக்கப்பட்ட பெண் சுயநினைவை இழந்ததோடு தான் இறந்துவிடுவேன் என நினைத்திருக்கிறார்.
therecord
15 ஆண்டுகள் சிறை
அப்பெண் வீட்டிற்கு நடந்து சென்ற வேளையில் இந்த கொடூர செயலை பிரயன் செய்தார்.
இதையடுத்து மோசமான வன்கொடுமை, கழுத்தை நெரித்து கொல்ல முயன்றது தொடர்பிலான வழக்குகள் பிரயன் மீது பாய்ந்த நிலையில் அவர் ஆபத்தான குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கொடூரன் பிரயனுக்கு இரு தினங்களுக்கு முன்னர் 15 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டது.
அவர் சிறையிலிருந்து வெளியேறும்போது அடுத்த 10 ஆண்டுகள் நெருக்கமாக கண்காணிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது