சென்னை: இடைத்தேர்தலில் போட்டியிட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் விருப்ப மனு தந்துள்ளார். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவிடம் சஞ்சய் சம்பத் விருப்ப மனுவை அளித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு குறித்து மேலிடம் முடிவு செய்யும் என்று சஞ்சய் சம்பத் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.