நாமக்கல்: கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் நேரில் செய்தனர். கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய ஆதாரமாக உள்ள சிசிடிவி வைக்கப்பட்ட இடம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். சுவாதி சாட்சியமளித்த நிலையில் சிசிடிவி காட்சி குறித்து கோவிலில் நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், ரமேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
கோவிலின் சிசிடிவி கேமராவில் கோகுல்ராஜ் தொடர்பான காட்சிகள் பதிவாகியிருந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய ஆதரமாக உள்ள சிசிடிவி வைக்கப்பட்ட இடம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். சிசிடிவி காட்சியில் கோகுல்ராஜூடன் இருப்பது யார் என தெரியாது என சாட்சியம் அளித்திருந்தார் சுவாதி. சிசிடிவி காட்சிகளை முறையாக ஆய்வு செய்யவில்லை என்ற குற்றம்சாட்டப்பட்டவர்கள் வாதிட்ட நிலையில் நீதிபதிகள் ஆய்வு செய்தனர். அர்தநாரீஸ்வரர் கோவிலுக்கு தோழியுடன் வந்துவிட்டு சென்றபின் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் கோகுல்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.