நுவரெலியா – நானுஓயா, ரதெல்ல பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த வான் சாரதியின் இறுதிக்கிரியைகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தின் போது வானின் சாரதியான 27 வயதுடைய தினேஷ் குமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்.
இறுதிக்கிரியைகள் நாளை
இந்தநிலையில், ஹட்டன் – குடாஓயா பகுதியில் உள்ள அவரது வீட்டில் நாளைய தினம் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளதுடன், குடாஓயா பொது மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த வான் சாரதி தினேஷ் குமாரின் உடல் நேற்று இரவு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்களை அவரின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.
மேலும், விபத்தின் போது உயிரிழந்த முச்சக்கர வண்டி சாரதியின் உடலும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.