வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது என மகாராஷ்ரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
மகாராஷ்ரா மாநிலத்தில் வர இருக்கும் சட்டசபை தேர்தலையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டார்.
பின் அவர் பேசியதாவது: கல்வித்துறை பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து, ஆய்வு மேற்கொண்டு வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் கிடைக்கும்.
இதன் கீழ், ஒரு ஊழியருக்கு கடைசியாக எடுக்கப்பட்ட சம்பளத்தில் 50 சதவீத தொகையை ஓய்வூதியமாக பெற உரிமை உண்டு. பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் கிடைக்கும்.
இதன் கீழ், ஒரு ஊழியருக்கு கடைசியாக எடுக்கப்பட்ட சம்பளத்தில் 50 சதவீத தொகையை ஓய்வூதியமாக பெற உரிமை உண்டு. முந்தைய மகா விகாஸ் அகாதி (எம்.வி.ஏ) அரசு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் நிலை என்ன?. இவ்வாறு அவர் பேசினார்.
சில மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும்போது, அவற்றின் நிதி நிலையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்து இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement