biggboss season 6 final: பிக்பாஸ்-6 நிகழ்ச்சி நிறைவு கட்டத்தை எட்டிவிட்டது, நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளர்களாக அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் உள்ளனர். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய போட்டியாளர்களிடம் சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்புவது வழக்கமான ஒன்று தான். அதுபோல பிக்பாஸ்-6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களுள் ஒருவரான ஷெரினிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பிய செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது. பிக்பாஸ்-6 நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஷெரின் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் ரீ-என்ட்ரி கொடுத்தார். அப்போது அவரிடம் அசீம் ஆணுறை கொண்டு வரவில்லையா என்று கேள்வி எழுப்பியதாக பல்வேறு வதந்திகள் பரவி நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்து வந்தனர். சர்ச்சையான மற்றும் அசிங்கமான பேச்சுக்களுக்கு புகழ்பெற்றவர் அசீம் என்பதால் இவர் கண்டிப்பாக இப்படி பேசியிருப்பார் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
பிக்பாஸ்-6 வீட்டிற்குள் நான்காவது சீசனில் இருந்த பாலாவை மிஞ்சும் அளவிற்கு அசீம் நடந்துகொண்டு பல விமர்சனங்களை பெற்று வந்தார். எதாவது ஒரு பிரச்சனை என்றால் வாயில் வந்த வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தி சக போட்டியாளர்களிடம் மரியாதையை இல்லாமல் பேசுவது போன்ற பல செயல்களை அசீம் செய்து வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் ரீ-என்ட்ரி கொடுத்த ஷெரினிடம் வந்து அசீம் காதலனை பார்க்க வரும்போது ஆணுறை கொண்டு வரவில்லையா? என்று கேட்டிருப்பதாகவும், அதில் ‘க’ என்கிற வார்த்தை மட்டும் கேட்பதாகவும் மற்ற வார்தைகளை பீப் செய்துவிட்டதாகவும் நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர். இந்த விஷயம் பூதாகரமாக கிளம்ப தற்போது இந்த வதந்திக்கு ஷெரின் விளக்கம் கொடுத்திருப்பது அசீம் ரசிகர்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.
ஷெரினின் இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு பயனர், உங்களிடம் அசீம் ஆணுறை கொண்டு வந்தாயா என்று கேட்டாரா, அப்படியொரு செய்தி பரவி வருகிறது, எது உண்மையா? இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஷெரினா தன்னிடம் அசீம் சிகரெட் கொண்டு வரவில்லையா என்றுதான் கேட்டார், அவர் காதலி என்கிற வார்த்தையையும் சேர்த்து பயன்படுத்தியதால் தான் நான் என் காதுகளை மூடினேன், மற்றபடி அவர் என்னிடம் வேறு எதுவும் கேட்கவில்லை என்று தெளிவுபடுத்தினார். தற்போது இந்த உரையாடலின் ஸ்க்ரீன் ஷாட்டை அசீம் ரசிகர்கள் இணையதளங்களில் பகிர்ந்து அசீம் மீது தவறு இல்லை என்று கூறி அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.