தடை செய்யப்பட்ட வலையில் பிடித்த மீன்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் ஏலம் விட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் கடற்கரையில் இருந்து நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் பாக் ஜலசந்தி கடலில் மீன் பிடிக்க சென்றனர்.
இரவு முழுவதும் மீன் பிடித்து விட்டு திரும்பிய படகுகளில் அதிக அளவில் மீன்கள் இருந்தது. ஆனால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையில் மீனவர்கள் மீன் பிடித்ததாக மீனவர்களின் படங்களில் மீன்வளத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதில் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையில் மீன் பிடித்து திரும்பிய ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதியை சேர்ந்த 48 விசைப்படகுகள் மற்றும் மீனவர்கள் மீது அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். மேலும் 4 டன் மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்பட்டது.