பாகிஸ்தானில், மின் பகிர்மான நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறால் கராச்சி, இஸ்லாமாபாத், லாகூர் உள்ளிட்ட நகரங்களில் காலை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அலுவலகங்களிலுள்ள கணிணிகளும், போக்குவரத்து சிக்னல்களும் இயங்காததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குளிர்காலத்தில், மக்களின் மின் தேவை குறைவதாலும், பல்வேறு சிக்கன நடவடிக்கைகளாலும், இரவில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டு, மீண்டும் காலை தொடங்கப்படுகிறது. அப்போது மின்னழுத்தத்தில் நேர்ந்த ஏற்றத் தாழ்வுகளால் மின் பகிர்மானம் பாதிக்கப்பட்டது.
நிதிபற்றாக்குறையால் ஜெனரேட்டர்கள் முறையாகப் பராமரிக்கப்படாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.