புதுடில்லி : இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, தன் ஊழியர்கள் 450 பேரை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது.
உலகளாவிய பொருளாதார மந்தநிலையைத் தொடர்ந்து, உலகின் முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.
‘கூகுள், மைக்ரோ சாப்ட், டுவிட்டர், ஸ்விக்கி, அமேசான்’ ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோவும், தன் ஊழியர்கள் 450 பேரை பணி நீக்கம் செய்து உள்ளது.
இதுகுறித்து விப்ரோ நிறுவனம் கூறியதாவது:
விப்ரோ நிறுவனத்திற்கு என வாடிக்கையாளர்களிடையே உயர்வான தர மதிப்பீடு உள்ளது. இதற்கு ஏற்றவாறு ஊழியர்கள் நிபுணத்துவம் இருக்க வேண்டியது அவசியம்.
இதற்காக பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறாத பணியாளர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இருப்பினும் வரும் ஆண்டுகளில் ‘கேம்பஸ் இண்டர்வியூ’ எனப்படும் வளாக தேர்வு வாயிலாக பணியாளர்கள் தேர்வு தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அந்நிறுவனம் கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement