விருத்தாசலத்தில் குப்புற கவிழ்ந்த அரசு பேருந்து.! காரை நிறுத்தி இறங்கிய அமைச்சர் சிவசங்கர்.!

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் அருகே சேப்பாக்கம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து விருத்தாசலத்திற்கு தடம் எண் 22 என்ற அரசு மாநகர பேருந்து ஒன்று இயக்கப்படுகிறது. 

சேப்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு, நல்லூர் வழியாக விருத்தாசலம் செல்லும் இந்த பேருந்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தனியார் மற்றும் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் அனைவரும் செல்லவேண்டும். 

இந்த நிலையில், இன்று வழக்கம் போல் சேப்பாக்கம் கிராமத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேருந்தில், சுமார் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இதையடுத்து இந்த பேருந்து, கோ.மங்கலம் கிராமம் வழியாக சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி  சாலை ஓரத்தில் உள்ள பாசன வாய்க்காலில் கவிழ்ந்தது. 

இதனால் பேருந்தில் வந்த பயணிகள் காப்பாற்றுமாறு சத்தம் போட்டனர். இதைக் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து, சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி, தீயணைப்புத் துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் இந்த விபத்தில் படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அந்த நேரத்தில், அந்த வழியாக வந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தனது காரினை நிறுத்திவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். 

மேலும், கூடுதல் ஆம்புலன்ஸ் வரவழைப்பதற்கும், போக்குவரத்தை சீர்படுத்துவதற்கும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பி ஏற்படுத்தி உள்ளது.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.