உக்ரைன் உடனான இந்த மோசமான போரில் ரஷ்யா தோல்வியை தழுவும் என்றால், ஜனாதிபதி பொறுப்பில் இருந்து விளாடிமிர் புடின் ஒருநாள் காணாமல் போய்விடுவார் என பிரித்தானிய முன்னாள் உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
புடினால் தாங்கிக்கொள்ள முடியாது
பிரித்தானியாவின் MI6 அமைப்பின் முன்னாள் தலைவரான Sir Richard Dearlove தெரிவிக்கையில், உக்ரைனுடனான தோல்வி விளாடிமிர் புடினால் ஒருபோது தாங்கிக்கொள்ள முடியாது எனவும், அவரது அரசியல் வாழ்க்கை தற்போது ஊசலாடுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
@getty
மேலும், ரஷ்யாவின் முக்கியமான ஒரு தலைவர், தாம் முன்னெடுத்த போர் மிக மோசமான நிலையில் இருந்து பரிதாபமான நிலைக்கு செல்வதை காணும் நிலையில் இருக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவில் நாட்டின் தலைவராக அடுத்து யார் வரவேண்டும் என்ற போட்டி தீவிரமடைந்து வருவதாகவும், சமூகத்திலும் பல்வேறு பிரச்சனைகளால் இறுக்கமான நிலை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புடினை எளிதாக வெளியேற்றிவிட முடியாது
நாம் கருதுவது போல, விளாடிமிர் புடினை எளிதாக ஒருபோதும் வெளியேற்றிவிட முடியாது. ஆனால் அவருக்கு இருக்கும் உடல் நிலை சிக்கல்களால் தாமே முன்வந்து வெளியேறும் சூழல் உருவாகும் எனவும், அதன் பின்னர் அவர் இயக்கும் ஒரு ஆட்சி ரஷ்யாவில் உருவாகும் என்றார்.
@getty
இதனிடையே, உக்ரைனில் கொல்லப்பட்டவர்கள் அல்லது காயமடைந்துள்ள ரஷ்யர்களின் எண்ணிக்கை 188,000 கடந்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்யாவின் 2,000 டாங்கிகள் அழிக்கப்பட்டுள்ளது அல்லது கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.