திருத்துறைப்பூண்டி : டெல்டா மாவட்டத்தில் கடைமடை பகுதியாக உள்ளது இங்கு விவசாயம் தவிர வேறு தொழிற்சாலைகள் எதுவும் இல்லை இங்கே வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு தொழில் செய்துவருகின்றனர். இதே போன்று திருத்துறைப்பூண்டி பகுதியில் மத்திய பிரதேசம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் பிழைப்பு தேடி வந்துள்ள பட்டறை தொழிலாளர்கள் முகாமிட்டு விவசாயம் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு தேவையான மண்வெட்டி, அருவா, அருவாமனை, கடப்பாறை, கத்தி, கோடரி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயார் செய்து விற்பனை செய்துவருகின்றார். ஒரு ஊரில் 3 மாதம் தங்கி வேளாண்மை, வீட்டுக்கு தேவையான பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்வார்கள்.