ஹோண்டா ஆக்டிவா H-Smart ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற ஸ்கூட்டர்களில் முதன்மை வகிக்கின்ற ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் H-Smart எனப்படும் ஸ்மார்ட் கீ வசதி சேர்க்கப்பட்டுள்ளது. மற்றபடி வடிவ அமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது.

ஆக்டிவா H-Smart ஸ்கூட்டர்

ஹோண்டா ஆக்டிவா ஸ்மார்ட் கீ ஸ்கூட்டரில் சாவி இல்லாத செயல்பாடுகளை வழங்குகின்றது. இதனால், ரைடர் ஹேண்டில்பார் லாக் அல்லது திறக்க உதவுதல், இருக்கைக்கு அடியில் உள்ள சேமிப்பை பயன்படுத்த மற்றும் முன்புறத்தில் உள்ள சுவிட்சை பயன்படுத்தி எரிபொருள் நிரப்ப மூடியைத் திறப்பது போன்ற பல்வேறு செயல்பாடுகளைச் செய்யலாம். பார்க்கிங்கில் உள்ள ஸ்கூட்டரை கண்டறியவும் இதனை பயன்படுத்தலாம். மேலும், ஸ்கூட்டர் திருட்டினை முற்றிலும் தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய செயல்பாடுகளை அணுக ஸ்கூட்டரில் அமைந்துள்ள சுவிட்சைப் பயன்படுத்தலாம். இது அலாய் வீல்களுக்கான புதிய வடிவமைப்பை பெற்றுள்ளது.

ஸ்டைலிங் மற்றும் மெக்கானிக்கல் விவரக்குறிப்புகள் மாறாமல் உள்ளன. எனவே, ஆக்டிவாவின் 109.51cc, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜினைத் தொடர்ந்து பயன்படுத்துகிறது. ஸ்டாண்டர்டு வேரியண்டில் சைலண்ட் ஸ்டார்ட் சிஸ்டம் மற்றும் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை அடங்கும். இது டெலஸ்கோபிக் முன் ஃபோர்க்குகள், ஒற்றை பின்பக்க ஸ்பிரிங் மற்றும் இரு சக்கரங்களிலும் டிரம் பிரேக்குகள் போன்றவற்றை தக்க வைத்துக் கொள்ளுகிறது.

Honda Activa 6G ‘Smart’ price

Variant

Price

Honda Activa Smart Rs. 80,537
Honda Activa Deluxe Rs. 77,036
Honda Activa Standard Rs. 74,536

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.