விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் 11 நாட்களில் 250 கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதனைப் படைத்துள்ளது.
பொங்கலை முன்னிட்டு தென்னிந்தியாவில் தமிழ் திரையுலகில் இருந்து அஜித்தின் ‘துணிவு’, மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ படங்கள் 11 -ம் தேதியும், தெலுங்கிலிருந்து பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’ 12-ம் தேதியும், சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’ 13-ம் தேதியும் வெளியாகின. இதில் ‘வாரிசு’ படம் பேமிலி ஆடியன்ஸை கவரும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதால், இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் மற்ற 4 படங்களை காட்டியும் முந்திச் சென்று வருகிறது.
‘வாரிசு’ திரைப்படம் 12 நாட்களில் இதுவரை 260.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவில் மட்டும் 171.75 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது ‘வாரிசு’. குறிப்பாக, தமிழ்நாட்டில் 109.05 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. பொங்கல் விடுமுறை முடிந்தும் ஓரளவு வசூலை ‘வாரிசு’ படம் ஈட்டி வருகிறது.
Podra bgm ah #MegaBlockbusterVarisu collects 250Crs+ worldwide in 11 days nanba #Thalapathy @actorvijay sir @directorvamshi @SVC_official @MusicThaman @iamRashmika @TSeries #Varisu #VarisuPongal#VarisuHits250Crs pic.twitter.com/I1UJgRIGoJ
— Sri Venkateswara Creations (@SVC_official) January 23, 2023
12-ம் நாளில் கூட ‘வாரிசு’ திரைப்படம் 10.6 கோடி ரூபாய் வசூலித்துள்ளநிலையில், ‘துணிவு’ படம் 6.9 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. கிட்டத்தட்ட ஒரேநாளில் ‘துணிவு’ படத்தை விட ‘வாரிசு’ படம் இரண்டு மடங்கு வசூல் பெற்றுள்ளது. இதுவரை ‘துணிவு’ படம் உலகளவில் 180.51 கோடி ரூபாயும், இந்திய அளவில் 123.06 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் ‘வாரிசு’ படம் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ள நிலையில், ‘துணிவு’ படம் 99.25 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது.
அஜித்தின் ரசிகர்களுக்கு இந்தப் படம் திருப்திகரமாக அமைந்தாலும், அவர்களை தாண்டிய வட்டத்தில் குறிப்பிட்ட ஆடியன்ஸுக்கு மட்டுமே புரியும் வகையில் வங்கி சம்பந்தமான மோசடி குறித்து எடுக்கப்பட்டுள்ளதே, படத்திற்கான வசூல் சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. 2-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், படத்திற்கான டிக்கெட் புக்கிங்களும் குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தெலுங்கில் இதேபோல் சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் அந்தப் படம் உலக அளவில் 195.6 கோடி ரூபாயும், தெலுங்கில் மட்டும் 154.85 கோடி ரூபாயும் 10 நாட்களில் வசூலித்துள்ளது. அதேநேரத்தில் பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’ படம் இதுவரை 124.1 கோடி ரூபாய் 11 நாட்களில் வசூலித்துள்ளது.
வாரிசு வசூலுக்கு காரணம் என்ன?
வாரிசு படத்தைப் பொறுத்தவரை முதல் இரண்டு நாட்களில் துணிவு படத்தை விட குறைவான வரவேற்பே இருந்ததாக கருதப்பட்டது. முதல் நாளில் துணிவு படத்தின் வசூல் வாரிசை விட சற்றே அதிகம் என்றும் கூறுகிறார்கள். ஆனால், நாட்கள் செல்ல செல்ல பேமிலி ஆடியன்ஸ் கூட்டம் கூட்டமாக வாரிசு படத்திற்கு படையெடுக்க தொடங்கினர். பேமிலி ஆடியன்ஸை பொறுத்தவரை 5 பேர் முதல் 10 பேர் வரை மொத்தமாக டிக்கெட் புக் செய்வதாக திரையரங்குகள் தரப்பில் கூட கூறுகின்றனர். ஜனவரி 14 முதல் 17 ஆம் தேதி வரையிலான பொங்கல் பண்டிகை நாள் முழுவதும் வாரிசு படத்திற்கு எதிர்பார்க்காத வசூல் கிட்டியதாக பலரும் கூறுகின்றனர். ஏனெனில் தொடக்கத்தில் படத்தின் மீது விமர்சனங்கள் அவ்வளவு பாசிட்டிவ் ஆக வரவில்லை என்பதால் வாரிசுக்கு அதிக அளவில் வசூல் கிடைக்காது என்றே திரையரங்கு உரிமையாளர்கள் பலரும் கருதினர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக துணிவை ஓவர் டேக் செய்து வாரிசு வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
அதேபோல், தமிழ் சினிமாவை தாண்டி மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்திய அளவில் வாரிசு படத்திற்கு மிகப்பெரிய வசூல் கிடைத்ததும் இதற்கு முக்கியமாக கருதப்படுகிறது. உலக அளவில் பொறுத்தவரை துணிவு படத்திற்கு பெரிய அளவில் லைகா தரப்பில் புரமோஷன் செய்யப்பட்டது. அதனால் வழக்கத்தை விட அஜித் படத்திற்கு கூடுதலாக வசூல் ஆகி வருகிறது. இருப்பினும் ஓவர் சீஸ் வசூலும் இருதரப்பினும் சம அளவிலேயே இருப்பதாக சோல்லப்படுகிறது. எப்படி பார்த்தாலும் நடிகர் விஜய் தனக்கான மார்க்கெட்டை தொடர்ச்சியாக தக்க வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து காத்திருக்கும் தளபதி 67
விக்ரம் படத்தின் மூலம் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தி காட்டியவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அதனால், தளபதி 67 படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.