மும்பை:மத்திய அரசின் இ.சி.எல்.ஜி.எஸ்., எனும், அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் வாயிலாக, கிட்டத்தட்ட 14.6 லட்சம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் காப்பாற்றப்பட்டு உள்ளதாக, எஸ்.பி.ஐ., ஆராய்ச்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று நோய் பரவல் காலத்தில், தடை உத்தரவுகளால், வணிகங்கள் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பதற்காக, மத்திய அரசு, பிணை எதுவும் தேவைப்படாத இ.சி.எல்.ஜி.எஸ்., கடன் திட்டத்தை அறிமுகம் செய்தது.இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 2.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கூடுதல் கடனால், கிட்டத்தட்ட 14.8 லட்சம் வணிகங்கள் காப்பாற்றப்பட்டதாக, எஸ்.பி.ஐ., தெரிவித்துள்ளது.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தினால், கிட்டத்தட்ட 6.6 கோடி மக்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை இழக்காமல் தடுக்கப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ், வங்கிகளின் வாயிலாக 2.2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்கப்பட்டு உள்ளது. அதாவது, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் நிலுவைக் கடனில், 12 சதவீதம் அளவுக்கு, வாராக் கடனாக மாறாமல் தடுக்கப்பட்டு உள்ளது.இதன் காரணமாக, 6.6 கோடி பேர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப் பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement