கரீபியன் தீவு நாடான ஹைதியில் இருந்து அமெரிக்கா நோக்கி 396 அகதிகளை ஏற்றிச் சென்ற படகை அமெரிக்க கடலோரப் பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்தனர்.
ஹைதி நாட்டில் வறுமையும் – வன்முறையும் அதிகரித்ததால் வாழ்வாதாரத்தை தேடி ஏராளமானோர் மெக்சிகோ வழியாக அமெரிக்காவில் தஞ்சமடைய ஆபத்தான கடற்பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வாறு, ஹைதியில் இருந்து பஹாமாஸ் வழியாக அகதிகளுடன் சென்ற படகினை, கண்ட கடலோர காவல்படை ரோந்து போலீசார் அதிவேக படகில் சென்று மடக்கி பிடித்தனர்.