மெல்போர்ன்,
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்னில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டங்களில் விம்பிள்டன் சாம்பியனான எலினா ரைபகினா (கஜகஸ்தான்) 6-2, 6-4 என்ற நேர் செட்டில் ஆஸ்டாபென்கோவையும் (லாத்வியா), முன்னாள் நம்பர் ஒன் நட்சத்திரம் விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 6-4, 6-1 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஜெசிகா பெகுலாவையும் (அமெரிக்கா) பதம் பார்த்து அரைஇறுதிக்கு முன்னேறினர்.
கலப்பு இரட்டையரில் இந்தியாவின் சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடியை எதிர்த்து ஆட இருந்த ஆஸ்டாபென்கோ (லாத்வியா) வெகா ஹெர்னாண்டஸ் (ஸ்பெயின்) ஆகியோர் திடீரென ஒதுங்கியதால் களம் இறங்காமலேயே சானியா- போபண்ணா இணை அரைஇறுதியை உறுதி செய்தது.