உள்ளூர் இந்திய உணவகம் ஒன்று வெளியிட்ட விளம்பர காணொளியில் இறந்துபோன தமது கணவரை அடையாளம் கண்டதாக கூறிய பிரித்தானிய பெண் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.
கணவர் இறந்து 9 ஆண்டுகள்
தொடர்புடைய உணவகத்தில் கடந்த வாரம் தமது கணவர் உணவருந்தியிருக்கலாம் என அந்த உணவக நிர்வாகம் கூறியுள்ளதை சுட்டிக்காட்டிய அந்த பெண், தமது கணவர் இறந்து 9 ஆண்டுகள் கடந்துவிட்டது என்றார்.
Credit: Google maps
இது தவறுதலாக நடந்த விடயமாக இருக்கலாம் எனவும், ஆனால் அந்த காணொளி புதிதாக பதிவு செய்ததல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
59 வயதான லூசி வாட்சன் உறுதியாக நம்புகிறார், அந்த காணொளி 9 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டது என்று.
தொடர்புடைய காணொளியை சமூக ஊடகத்தில் பகிர்ந்து புயலையே கிளப்பினார் லூசி வாட்சன் நேற்று.
சிசெஸ்டர் பகுதியில் செயல்பட்டு வரும் இந்திய உணவகமான The Spice Cottage சமீபத்தில் விளம்பர காணொளி ஒன்றை வெளியிட்டது.
அந்த காணொளியிலேயே லூசி வாட்சன் தமது கணவர் ஹரி தொஹெர்தி உணவருந்துவதை அடையாளம் கண்டு ஸ்தம்பித்துப் போனார்.
இப்படியான ஒரு நொடி நீண்ட 9 ஆண்டுகளுக்கு பின்னர் எதிர்பார்க்கவே இல்லை என தெரிவித்திருந்தார் லூசி வாட்சன்.
கணவர் என்பதில் சந்தேகம் இல்லை
அந்த காணொளி பதிவு செய்யும் போது அவர் அந்த உணவகத்தில் அவருக்கு மிகவும் பிடித்தமான கோழி கோர்மா சாப்பிட்டிருக்கலாம் என லூசி தெரிவித்துள்ளார்.
எனது மகனுடன் அந்த உணவகத்தில் காணப்படுபவர் எனது கணவர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என குறிப்பிட்டுள்ள லூசி.
இதனால் சுமார் 30 நிமிடங்கள் காணொளியை விரிவாக அலசினேன் எனவும், ஒவ்வொருமுறையும் அது தமது கணவர் தான் என்பதை உறுதி செய்தது என்கிறார் லூசி.
அதன் பின்னரே, அந்த காணொளி தொடர்பில் பதிவு செய்த நாளை விசாரித்ததாகவும், ஆனால் அவர்கள் கடந்த வாரம் பதிவு செய்துள்ளதாக கூறினர் என்றார்.
9 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்த காணொளியை மக்கள் எப்படி புதிது என வெளியிட்டு, மக்களை நம்ப வைக்கிறார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமது கணவர் ஹரி 2014ல் இறக்கும் முன்னர் சில மாதங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மேலும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த அவர், இறுதியில் மரணமடைந்தார் என லூசி குறிப்பிட்டுள்ளார்.