குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காவல்துறைக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததையடுத்து இரவு முழுக்க போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
நகரம் முழுவதும் வாகனசோதனை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அகமதாபாத் ரயில் நிலையத்தைத் தகர்க்கப் போவதாக கடிதம் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து ரயில் நிலையத்தில் போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.
மிரட்டல் விடுத்ததாக சந்தேகிக்கப்படும் 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதே போன்று உத்தரப்பிரதேசம் லக்னோ ரயில் நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.