இலங்கையில் மனிதவள ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை
துருக்கி மறுத்துள்ளது.
சமூக ஊடகங்களில் இது தொடர்பில் சில தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக
தூதரகத்தின் உடனடி கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள
துருக்கிய தூதரகம் தெரிவித்துள்ளது.
ஆட்சேர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை
கொழும்பில் உள்ள துருக்கிய தூதரகமோ அல்லது துருக்கிய உள்துறை அமைச்சகமோ
இதுபோன்ற ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்று தூதரகம் கூறியது.
எனினும் இது சில தனியாட்களால் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.