பெங்களூரு: கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பொருட்களை ஏலம் விடும் விவரங்களை வெளியிட வேண்டும் என்று பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் நரசிம்மமூர்த்தி சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சென்னை இல்லத்தில் இருந்து 1996ம் ஆண்டு டிச.11ம் தேதி பறிமுதல் செய்யப்பட்ட காலணிகள், புடவைகள், கண்ணாடிகள், டீப்பாய், டேபிள், சால்வைகள் உள்ளிட்ட ெபாருட்கள் பெங்களூரு கருவூலத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த பொருட்களில் எந்தெந்த பொருட்களை அரசு ஏலம் விடப்போகிறது என்ற விவரங்களை வெளியிட வேண்டும். இது குறித்து பொதுத்துறை தகவல் அதிகாரியிடம் கேட்டபோது ஏலம் விடப்போகும் ெபாருட்களின் விவரங்களை வெளியிட மறுத்துவிட்டார்.
இதையடுத்து தலைமை சிட்டி சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தை அணுகி முறையிட்டேன்’ என குறிப்பிட்டுள்ளார். இதை விசாரித்த சிவில் கோர்ட் ‘கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் பொருட்களில் எதை எதை ஏலம் விடப்போகிறீர்கள் என்ற தகவலை மனுதாரருக்கு பகிரலாம் என்று கூறி, பொதுத்துறை தகவல் அதிகாரியின் மனுவை நிராகரித்து உத்தரவிட்டது.