தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது ஏழை, எளிய மக்களின் சுரண்டி வாழ்வாதாரத்தை பாதிப்பதாக எழுந்த குற்றச்சாட்டால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தடை செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தார். ஆனால் பிற மாநிலங்களில், பல்வேறு நாடுகளில் லாட்டரி சீட்டுகள் இன்னும் பயன்பாட்டில் தான் இருக்கின்றன. ஆனால் அளவாக பணத்தை செலவிட்டு லாட்டரி சீட்டுகளில் ஜாக்பாட் பரிசை அள்ளும் பலரை பற்றி செய்திகளில் கேள்விப்பட்டிருப்போம்.
பிலிப்பைன்ஸ் இளைஞர்
அப்படி ஒரு நிகழ்வு துபாயில் நடந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரஸ்ஸல் ரெய்ஸ் துஸான். இவரது வாழ்க்கை ஒரே இரவில் தலைகீழாக மாறும் என எதிர்பார்த்திருக்க மாட்டார். கடந்த 2008ஆம் ஆண்டு தனது 19 வயதில் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களை விட்டு விட்டு துபாய் வந்துள்ளார். ஓட்டல் ஒன்றில் ஊழியராக பணியில் சேர்ந்தார்.
5 நாட்களுக்கு லாக்டவுன் அமல்… விநோத சுவாச பாதிப்பு- கலங்கும் வடகொரியா!
ஓட்டல் ஊழியர்
வாடிக்கையாளர்களுக்கு தேவையான உணவு, பானங்களை சிறப்பான உபசரிப்புடன் பரிமாறும் வேலையை தொடர்ந்து செய்து வந்துள்ளார். படிப்படியாக தனது நிலையை உயர்த்தி கடை மேலாளர் ஆகியிருக்கிறார். தனது இளவயது வாழ்வை துபாயில் தான் கழித்துள்ளார். இங்கேயே பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொண்டார். இந்த அன்பான தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.
கொரோனா நெருக்கடி
2019ல் தனது மனைவி மற்றும் குழந்தையை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து விட்டு பணியை தொடர்ந்துள்ளார். கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்தில் பல்வேறு சிரமங்களை சந்தித்தார். கிட்டதட்ட ரோலர் கோஸ்டர் போல் ஏற்ற இறக்கங்களுடன் வாழ்க்கையை கடந்து வந்துள்ளதாக ரஸ்ஸல் ரெய்ஸ் குறிப்பிட்டுள்ளார். தற்போது 34 வயதாகும் நிலையில் Emirates Draw EASY6 நிறுவனத்தின் லாட்டரி சீட்டை முதல்முறை வாங்கியுள்ளார்.
பரிசு மழை
இந்நிலையில் குலுக்கல் நடைபெற்றதில் 15 மில்லியன் திராம் பரிசு விழுந்துள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் 33 கோடி ரூபாய். இவர் வழக்கம் போல் பகல் நேரத்தில் வேலையை முடித்து விட்டு இரவு நன்றாக உறங்கியுள்ளார். நள்ளிரவு தாண்டியதும் திடீரென போன் வந்துள்ளது. இந்த நேரத்தில் யார் கூப்பிட போகிறார்கள் என்ற சந்தேகத்துடன் போனை எடுத்துள்ளார்.
நெட்ஃபிளிக்ஸ் பாஸ்வேர்ட் பகிர்வுக்கு கட்டணம்; ஏப்ரல் முதல் அமல்.!
மகிழ்ச்சியில் குடும்பத்தினர்
உங்களுக்கு முதல் பரிசு விழுந்துள்ளது. பரிசுத் தொகை 15 மில்லியன் திராம் என்றதும் ஆடிப் போய்விட்டார். இது கனவா? இல்லை நிஜமா? என்ற மீண்டும் மீண்டும் பரிசோதித்து பார்த்துள்ளார். இந்த மகிழ்ச்சியான விஷயத்தை உடனடியாக பிலிப்பைன்ஸில் உள்ள தனது மனைவிக்கு போன் செய்து கூறினார். அதைக் கேட்டு மனைவியும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளார்.
துபாயில் செட்டில்
முதலில் மனைவி நம்பாத நிலையில் பரிசு கிடைத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இ-மெயிலை போட்டோ எடுத்து அனுப்பிய பின்னரே நம்பியிருக்கிறார். அடுத்து தனது குடும்பத்துடன் துபாயிலேயே செட்டில் ஆக திட்டமிட்டுள்ளார். விரைவில் ஓட்டல் ஒன்றை திறக்கலாம் என்று ஆலோசித்து வருகிறார். பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரஸ்ஸல் ரெய்ஸுக்கு பரிசு கிடைத்த விஷயம் இணையத்தில் பெரிதும் வைரலாகி கொண்டிருக்கிறது.