வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நாட்டின் குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில், இன்று(ஜன.,26) கூகுள் இணைய பக்கத்தின் முகப்பில் கூகுள் சிறப்பு ‘டூடுல்’ வெளியீட்டுள்ளது.
ஆண்டும் தோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு, கூகுள் சிறப்பு டூடுல் வெளியீடுவது வழக்கம். நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் இணைய தேடு பொறி நிறுவனங்களில் முதன்மை நிறுவனமான கூகுள் நிறுவனம், இணைய பக்கத்தின் முகப்பில் கூகுள் சிறப்பு ‘டூடுல்’ வெளியீட்டுள்ளது.
கூகுள் சிறப்பு ‘டூடுல்’ சிறப்பம்சங்கள்:
குடியரசு தின அணிவகுப்பின் பல்வேறு சிறப்புகள் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மாளிகை, மோட்டார் சைக்கிள் சாகசம், இசை கருவிகள், உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.
உலகின் மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் குடியரசு தினவிழாவினை பிரதிபலிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் தனது டூடுலை வெளியீட்டுள்ளது. இந்த டூடுலை குஜராத்தைச் சேர்ந்த விருந்தினர் கலைஞர் பார்த் கோதேகர் வடிவமைத்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement