வேலூர்: தமிழ்நாடு அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘சட்டப்பிரிவு 46(i), 46(iii)ன் கீழ் விளம்புகை செய்யப்பட்டு அனைத்து பட்டியலை சேர்ந்த கோயில்களிலும் உண்டியல் திறப்பு நிகழ்வை கோயில் நிர்வாகம் மூலம் நேரடியாக திருக்கோயிலின் யூ டியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்ய செயல் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக திருக்கோயிலின் யூ டியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் லிங்க்ஐ அதற்காக வழங்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றி ஐடிஎம்எஸ் தளத்தில் உள்ள திருக்கோயில் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. உண்டியல் திறப்பு மற்றும் எண்ணிக்கை ஒளிபரப்பு செய்யப்படுவதை மண்டல இணை ஆணையர்கள் உறுதி செய்ய வேண்டும்’ என்று கூறி உள்ளார்.