தென்மேற்கு ஜப்பானில், மோசமான வானிலையால் சரக்குக் கப்பல் மூழ்கிய விபத்தில் சிக்கி 2 பேர் Cந்தனர்.
ஜப்பானின் நாகசாகி மற்றும் தென் கொரியாவின் ஜெஜு தீவுக்கு இடையே சென்று கொண்டிருந்த கப்பலொன்று செவ்வாய்கிழமை அதிகாலை மூழ்கியது.
கடலில் மூழ்கத் தொடங்கியதும், அபாயக் கட்டத்தில் இருப்பதாக கப்பலிலிருந்து சிக்னல் அனுப்பப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தென்கொரிய மற்றும் ஜப்பான் கடலோரக் காவல் படையினர், கடும் குளிருக்கு மத்தியிலும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
மொத்தம் இருந்த 22 ஊழியர்களில் 13 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன 9 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.