தமிழகத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு அருகே சென்னேரி கிராமத்தைச் சேர்ந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த இருவரும் அபாயகரமான மற்றும் விஷம் கொண்ட பாம்புகளை பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள்.
முறையான கல்வி பெறாத வடிவேல், மாசி ஆகியோர் உலகம் முழுவதும் பயணம் செய்து பாம்புகளை பிடித்துள்ளனர்.
2017ம் ஆண்டு அமெரிக்காவின் புளோரிடா மாகாண உயிரியல் பூங்காவில் சுற்றித் திரிந்த 33 பர்மீஸ் ரக மலைப்பாம்புகளை பிடித்து கொடுத்து அந்நாட்டிற்கு உதவியுள்ளனர்.
வடிவேல், மாசிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டுத் தெரிவித்துள்ளார். விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றியும், அரிய பாம்பு விஷங்களை சேகரிப்பதிலும் இவர்கள் உதவியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.