ரஷ்யாவை போரில் எதிர்கொள்வதற்காக உக்ரைனுக்கு 31 ஆப்ரம்ஸ் பீரங்கிகளை அனுப்பி வைக்கப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் சரமாரியான ஏவுகணைத் தாக்குதலை சமாளிக்க பீரங்கிகள் தேவை என அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார். ஜெர்மனி உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகள் அதற்கு ஒப்புதல் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் அமெரிக்காவும் 31 பீரங்கிகளை உக்ரைனுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இதனிடையே வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் வீரர்களுக்கு அமெரிக்கா பயிற்சி அளிக்கும் என்று கூறியுள்ளார்.