வெளிநாட்டில் மோசமான செயலில் ஈடுபட்ட பிரித்தானிய கர்ப்பிணிப்பெண்…


பிரித்தானியப் பெண் ஒருவரும், அவரது சகோதரரும் ஸ்பெயின் நாட்டில் ஒரு வித்தியாசமான மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

சுற்றுலாப்பயணிகளை வைத்து ஒரு மோசடி

எசெக்சில் பிறந்தவரான லாரா (Laura Joyce) என்னும் பெண்ணும், அவரது சகோதரரான மார்க்கும் (Marc Cameron Grimstead), ஸ்பெயின் நாட்டுக்குச் சொந்தமான Majorca தீவிலுள்ள ஹொட்டல்களுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை வைத்து இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளனர்.

அதாவது, Majorca தீவிலுள்ள ஹொட்டல்களில் தங்கும் சுற்றுலாப்பயணிகளிடம், அவர்கள் அந்த ஹொட்டல்களில் தங்கியிருக்கும்போது food poisoning என்னும் பிரச்சினையால் தாங்கள் பாதிக்கப்பட்டதாக பொய் சொல்லி ஏமாற்றி, அதை நிரூபிப்பதுபோல போலியான ஆவணங்களைத் தயார் செய்து, அந்த ஹொட்டல்களிடம் இழப்பீடு கோர வைத்துள்ளார்கள் இந்த பெண்ணும் அவரது சகோதரரும்.

வெளிநாட்டில் மோசமான செயலில் ஈடுபட்ட பிரித்தானிய கர்ப்பிணிப்பெண்... | Mum Brits Spanish Holiday Food Poisoning Scam

Credit: Solarpix

கைது செய்யப்பட்ட கர்ப்பிணி

இந்த மோசடி குறித்து அதிகாரிகளுக்குத் தெரியவரவே, அவர்கள் லாராவையும் அவரது சகோதரரையும், அவர்களுக்கு உதவியாக இருந்த ஐந்து பிரித்தானியர்களையும் கைது செய்தனர்.

லாரா கைது செய்யப்படும்போது அவர் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார். கர்ப்பிணியான லாராவை பொலிசார் கைது செய்து அழைத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

லாரா முதலானவர்கள் செய்த மோசடியால் ஹொட்டல் குழுமங்கள் இழந்த தொகை சுமார் 9.5 மில்லியன் பவுண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெளிநாட்டில் மோசமான செயலில் ஈடுபட்ட பிரித்தானிய கர்ப்பிணிப்பெண்... | Mum Brits Spanish Holiday Food Poisoning Scam

Credit: Solarpix



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.