சென்னை: 74வது குடியரசு தின விழாவையொட்டி, சென்னை கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றினார். அதைத்தொடர்ந்து அணிவகுப்பு மரியாதை நடைபெற்று வருகிறது. நடப்பாண்டு குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரையில், உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்று வருகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் அமைச்சர்கள், அதிகாரிகள், நீதிபதிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் அணிவகுப்பு மரியாதையை கண்டுகளித்து வருகின்றனார். முன்னதாக, குடியரசு தின கொண்டாட்டம் நடைபெறும் கடற்கரைக்கு […]