அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளியானது. வினோத்தின் கூட்டணியில் அஜித் நடித்த மூன்றாவது திரைப்படமான துணிவு ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்றது. சமூகம் சார்ந்த கருத்தோடு கூடிய ஆக்ஷன் திரில்லர் படமாக வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது.
மேலும் கடைசியாக இவர்களின் கூட்டணியில் வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் துணிவு படத்தின் வெற்றி அதனை ஈடு செய்துள்ளது. இதையடுத்து அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் AK62 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
Varisu- Thunivu: மிகவும் எதிர்பார்த்த வாரிசு – துணிவு…கடைசில இப்படி ஆகிடுச்சே..!
இவர்கள் இணையும் இப்படத்தின் அறிவிப்பு கடந்தாண்டு வெளியானது. இந்த அறிவிப்பை கேட்ட ரசிகர்கள் அனைவர்க்கும் சற்று ஆச்சரியமாகவே இருந்தது. ஏனென்றால் அஜித் சமீபகாலமாக ஆக்ஷன் படங்களிலேயே நடித்து வருகின்றார். ஆனால் விக்னேஷ் சிவன் காமெடி கலந்த காதல் படங்களை தான் இயக்கிவருகின்றனர்.
எனவே இவ்விருவரும் இணையும் படம் எவ்வாறு இருக்கும் என ரசிகர்கள் பேச துவங்கினர். இந்நிலையில் அஜித் மற்றும் விக்னேஷ் சிவன் இணையும் திரைப்படம் ஆக்ஷன் கலந்த காமெடி படமாக இருக்கும் என்றும், அஜித் ஜாலியான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வந்துள்ளது.
லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க அரவிந்த் சாமி, சந்தானம் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் நாயகி தேர்வு தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதமே துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால் அஜித் கதையில் சில மாற்றங்களை செய்யச்சொன்னதால் தான் இந்த தாமதம் ஏற்படுவதாக பேசப்பட்டு வருகின்றது. எனவே விக்னேஷ் சிவன் தற்போது கதையில் சில மாற்றங்களை செய்து முடித்த பின் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது
.