Budget 2023: பல்வேறு துறைகளின் முக்கிய எதிர்பார்ப்புகள், நிறைவேற்றுமா அரசு?

மத்திய பட்ஜெட் 2023: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட் குறித்து பொதுமக்களுக்கும் பல்வேறு துறையினருக்கும் பல எதிர்பார்ப்புகள் உள்ளன. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிர்வாகத்தின் இறுதி முழு ஆண்டு பட்ஜெட்டாக இது இருக்கும். ஆகையால், அரசு இந்த முறை பல பெரிய அறிவிப்புகளை அரசு வெளியிடக்கூடும் என நிபுணர்கள் கருதுகிறார்கள். 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடமிருந்து அதிக அளவிலான எதிர்பார்ப்புகள் உள்ளன. மேலும் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் உலக அளவில் பொருளாதார வளர்ச்சியைத் தொடருமா என்பது குறித்த செய்திகளை தொழில்துறை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறது.

இந்தியாவின் திட்டமிடப்பட்ட உள்நாட்டு வளர்ச்சி ஊக்கமளிக்கிறது. ஆனால் புவிசார் அரசியல் அபாயங்கள், அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் மந்தமான உலகப் பொருளாதார வளர்ச்சி ஆகியவை நம்மைச் சுற்றி இன்னும் உள்ளன. பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் வரவிருக்கும் நிலையில், உற்பத்தி, ரியல் எஸ்டேட், எட்-டெக், விவசாயம், விருந்தோம்பல், வங்கி, தொலைத்தொடர்பு, எம்எஸ்எம்இ மற்றும் பல துறைகள் இந்த ஆண்டு பட்ஜெட்டில் தங்கள் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தியுள்ளன.

கொரோன தொற்றுநோயால் ஏற்பட்ட விளைவுகள் இன்னும் முற்றிலும் தணியவில்லை. அனைத்து துறைகளும் வரி செலுத்துவோர் பணப்புழக்கத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும், பல்வேறு தொழில்களில் நுகர்வு அதிகரிக்க குறிப்பிட்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, ஒவ்வொரு நபரின் பொருளாதார நிலையும் மேம்படுவதற்கான விரிவான அணுகுமுறையை வரவிருக்கும் பட்ஜெட் எடுக்க வேண்டும் என்று தொழில்துறை எதிர்பார்க்கிறது. 

முக்கிய இலக்கு

மத்திய பட்ஜெட் 2023 முதன்மையாக நாடு முழுவதும் விரிவான முழுமையான வளர்ச்சியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தும். ஆனால் பெண்களின் ஆரோக்கியம், வேலைவாய்ப்பு உருவாக்கம், ஸ்டார்ட்அப், ஓய்வுபெற்றோர் நலம், முதியோர் நலம், ஆகிய நாட்டின் முக்கிய அம்சகளிலும் அதிக கவனம் செலுத்தப்படும்.

முக்கிய எதிர்பார்ப்புகள்

இந்த பட்ஜெட்டை பொறுத்தவரை வரி விலக்கு, வரி வகைகள், வரி வரம்பு ஆகியவற்றில் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. 

– சில காலமாக எந்த மாற்றமும் செய்யப்படாமல் நிலையாக இருக்கும் ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் வரம்பு வளர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு ஏற்ப அதிகரிக்கப்பட வேண்டும் என்று வரி நிபுணர்கள் கருதுகிறார்கள். 

– 80Cக்கான வரம்பு நீண்ட காலமாக ரூ. 1,50,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாறி வரும் பொருளாதார சூழலில், இன்றைய தேவையை பூர்த்தி செய்ய 80Cக்கான வரம்பு குறைந்தபட்சம் ரூ. 2,00,000 ஆக அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

– மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டு பிரீமியத்திற்கான 80டி வரம்பையும் ரூ75,000, ரூ. 1,00,000 வரை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. 

– உடல்நலம் மற்றும் ஆயுள் காப்பீடு மீதான ஜிஎஸ்டியை அகற்ற காப்பீட்டுத் துறை கோரி வருகிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.