ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் உயரமானவர் என்பதை காட்ட ஹை ஹீல்ஸ் ஷூ அணிந்திருந்தாக வெளியான புகைப்படம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
மாணவர்களுடன் சந்திப்பு
ரஷ்ய மாணவர் தினத்திற்காக மாஸ்கோ சென்ற ஜனாதிபதி புடின், அங்கு மாணவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அந்தப் புகைப்படத்தில் அவர் ஹை ஹீல்ஸ் ஷூ அணிந்திருந்தது தற்போது பல கேள்விகளுக்கு வித்திட்டுள்ளது.
புடின் தன்னை உயரமானவராக காட்டிக்கொள்ள இதுவரை முயற்சித்து வந்துள்ளார் என்பது இந்தப் புகைப்படத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏனெனில் அவர் 1999ஆம் ஆண்டில் பதவிக்கு வந்ததில் இருந்து தனது இமேஜை கட்டுக்குள் வைத்துக் கொள்வதில் கவனமாக இருந்தார்.
@Reuters
உயரமாக காட்டிக் கொள்ளுதல்
அதில் ஒன்று தான் தன்னை உயரமாக காட்டிக்கொள்வது. அதற்காக குதிரையில் சவாரி செய்வதையும், மேலாடையின்றி துப்பாக்கிகளை ஏந்தியபடியும் இருக்கும் புகைப்படம் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
மேலும், புடினை விட அவரது மெய்க்காப்பாளர்கள் உயரம் குறைவாக இருப்பது போல் தோற்றமளிக்க அவர் ஹை ஹீல்ஸ் அணிந்திருக்கலாம் என்று ஏற்கனவே செய்தித்தாள் ஒன்று 2015ஆம் ஆண்டு கூறியது.
இதற்கான காரணத்தை The Economist 2020ஆம் ஆண்டு விளக்கியது. அதாவது, அரசியலில் உயரம் என்பது முக்கியம். சராசரியாக உயரமான அரசியல்வாதிகள் தங்கள் போட்டியாளர்களை விட அதிகமாக செயல்படுவதாக அந்த இதழ் ஆய்வு செய்தி வெளியிட்டது.
உயரமானவர்கள் சராசரியாக அதிக சுயமரியாதையை அனுபவிப்பதோடு, ஆரோக்கியமானவர்களாகவும், அதிக அறிவாளிகளாகவும், அதிகாரம் மிக்கவர்களாகவும் கருத்தப்படுவதே இதற்கு காரணம் ஆகும்.
ரஷ்யா ஜனாதிபதியின் எதிர்மறையான பிரதிநிதித்துவங்களை தணிக்கை செய்வதில் கவனமாக உள்ளது.
போலி புடின்
இதற்கிடையில், மாணவர்களுடன் புகைப்படத்தில் இருப்பது புடின் அல்ல என்றும், அவரை போன்ற வேறு ஒரு நபர் என்றும் கிரெம்ளின் இன்சைடர் கூறுகிறது.
அதேபோல், அந்த புகைப்படத்தில் இருப்பது உண்மையான புடின் அல்ல என்பது சில வெளிப்படையான வேறுபாடுகள் மூலம் தெரிய வந்ததாகவும் தெரிவித்துள்ளது.
அதாவது, புதன்கிழமையன்று தோன்றிய வீடியோவில் அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தபோது புடின் தனது வலது கையை பார்வையில் இருந்து மறைத்துக்கொண்டு கூச்சமாக இருப்பதாக காட்டியது
ஈரானில் நடந்த உச்சி மாநாடு உட்பட கடந்த ஆண்டில் பலமுறை புடின் தனக்கு பதிலாக வேறு நபரை பங்கேற்க செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
குற்றச்சாட்டு
மேலும் உக்ரைனின் ராணுவ புலனாய்வு தலைவர், புடினிடம் அவரைப் போன்ற உருவமொத்த மூவர் இருப்பதாக முன்பு கூறினார்.
அவர்கள் அனைவரும் புடினைப் போல் இருக்க பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
புடின் போன்ற ஒரு நபர் தனக்கு அறிமுகம் இல்லாத நபர்களுக்கு அருகில் இருக்க முற்றிலும் பயப்படவில்லை. இது கடந்த சில ஆண்டுகளில் ஜனாதிபதிக்கு பொதுவானதல்ல.
எனவே தான் அந்த புகைப்படத்தில் இருந்தது போலி புடின் என்று கூறுகிறார்கள்.
@AFP/Getty Images
மேலும் அந்த முகத்திலும் அவரது நடத்தையிலும் வெளிப்படையான வேறுபாடுகள் காணப்பட்டன.
அவரது முகபாவனைகளை வழக்கத்திற்கு மாறாக இருத்தது என்றும் கூறியுள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதற்கிடையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இரட்டையர்களை பயன்படுத்த அதிகாரிகள் புடினை வற்புறுத்தியதாகவும் ஆனால் அந்த யோசனை நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.