கோவை பிரபல கல்லூரியில் பேசிய போது கண்கலங்கிய அண்ணாமலை..!! ஏன் தெரியுமா ?

கோவையில் பி. எஸ். ஜி. கல்லூரியில் படித்தவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதனால் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு விருது வழங்கப்பட்டது . இந்த விருதை பெற்றுக் கொண்டு கொண்ட அண்ணாமலை, நிகழ்ச்சி மேடையில் பேசி தனது கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

நான் இங்கு நிற்பது என்னைப் பற்றி பேச பேசுவதற்காக அல்ல. என்னை கொண்டு வந்து நிறுத்தியவர்களை பேசுவதற்காக. என் தாய், தந்தை எங்கே வந்திருக்கிறார்கள். அவர்கள் வந்திருக்கக்கூடிய முதல் மேடை இதுதான்.

எங்கே சென்றாலும் கூட எனக்கு ஞாபகம் இருக்கிறது. 2002 ஆம் ஆண்டில் இந்த கல்லூரியில் சேர வந்த போது டிரங்க் பெட்டியுடன் வந்து நின்றோம். மூன்று பேருந்துகள் மாறி தான் இங்கு வந்து நின்றோம்.

அப்போது என் தந்தையிடம் இந்த கல்லூரி நமக்கு சரியா இருக்குமா என்று சொன்னேன். வந்திருக்கக்கூடிய பாதை ,பிறந்த இடம் ,வசித்த இடம் எல்லாம் என்னை மனிதனாக மாற்றி சமுதாயத்தில் எனக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் கூட இந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் எங்கு சென்றாலும் கூட எங்கிருந்து வந்தோம். இப்போதும் கூட மறக்காமல் பயணம் செய்து கொண்டிருக்கிறேன் என்றால் அதற்கு பி. எஸ். ஜி கல்லூரி மட்டும்தான் காரணம்.

எதைச் செய்தாலும் அதை மனித குலத்திற்காக செய்ய வேண்டும். மக்களுடைய நன்மைக்காக அதை செய்ய வேண்டும் . நம் மூலம் நான்கு நபர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்கிற விதையை எனக்குள் விதைத்தது பி. எஸ். ஜி கல்லூரி என்று நெகிழ்ந்தார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, அப்போது என்னுடைய துறை தலைவராக இருந்தவர் மோகன் ராம். அவர் அற்புதமான மனிதர் . வகுப்பு பாடம் எல்லாம் அவருக்கு நிகர் யாருமில்லை. அவர் எனது கிடைத்தது பெரிய பாக்கியம். நான் அவர் முன் மேடையில் நின்று கொண்டிருக்கிறேன். இந்த தருணத்தில் அவருக்கு எனது நன்றிகள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அப்போது கல்லூரியில் முதல்வராக இருந்தவர் ருத்ரமூர்த்தி. என்னை இரண்டு முறை அவரது அலுவலகத்திற்கு அழைத்திருக்கிறார். இரண்டு முறை குறும்பு செய்ததற்காக தான் அழைத்தார்.

அப்போது தண்டனை என்பது ஒரு மாணவர் ஒரு குரூப்பில் சில விஷயங்கள் நடந்திருக்கும்போது நல்ல பாதைக்கு செல்ல வேண்டும் என நினைக்கும் ரொம்ப உத்தம மனது கொண்ட மனிதர் அவரும் இங்கு அமர்ந்திருக்கிறார். அவருக்கும் நன்றி வாழ்த்துக்களையும் சொல்லிக் கொள்கிறேன். எனக்கு பயிற்றுவித்த பேராசிரியர்கள் இங்கே அமர்ந்திருக்கிறார்கள். குறிப்பாக கல்லூரியின் தற்போது முதல்வராக இருக்கும் பிரகாசம் இங்கு அமர்ந்திருக்கிறார்.

பிஎஸ்ஜி பிரகாஷ் சார் இருக்கிறார். இரண்டு பேராசிரியர்களை நான் இழந்து இருக்கிறேன். ஜெகதீசன், சுந்தர்ராஜன் இங்கு இல்லை. அவர்கள் ஆண்டவனிடம் இருக்கிறார்கள். எனக்கு பாடம் கற்றுக் கொடுத்த இரண்டு நபர்கள் இல்லை என்பது சின்ன வெற்றிடம்தான்

2002 ஆம் ஆண்டிலிருந்து 2007ஆம் ஆண்டு வரை பிஎஸ்ஜி சான்ட் பீச் மெக்கானிக்கல் என்பது மிகுந்த அற்புதமான வகுப்பு. அனைவரும் விட்டுக் கொடுத்து நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்த ஒரு அற்புதமான வகுப்பு. என்னுடன் படித்த 57 பேரும் நன்றாக இருக்கிறார்கள். என்னைவிட மிகச் சிறப்பாக ஆளுமையாக வேறு வேறு இடத்தில் பணி செய்து கொண்டிருக்கிறார்கள்.

என்னை போல் சில பேர் மீடியா வெளிச்சத்தில் இல்லை என்றாலும் அவர்கள் செய்யும் பணி என்பது மிகவும் முக்கியமான பணியாக இருக்கிறது. என்னுடன் படித்த 57 பேரும் இந்த விருதை வாங்கியதாக கருதுகிறேன் என்று சொல்லி நெகிழ்ந்து கண்கலங்கினார் அண்ணாமலை.

அவர் மேலும் பேசியபோது, இந்த முக்கியமான நேரத்தில் என் மனைவியால் இங்கே வர முடியவில்லை. குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக வர முடியவில்லை . மாதா, பிதா, குரு, தெய்வம், மனைவி என்று இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். அவர்கள் இல்லை என்றால் நம்மால் எந்த வேலையும் செய்ய முடியாது என் மனைவி சார்பாக அவரது தாய் தந்தை வந்துள்ளார்கள். எப்போதும் என்னுடன் இருக்கும் என் அக்கா வந்திருக்கிறார் . எப்போதும் பி எஸ் ஜி சொல்லிக் கொடுத்த பாதையில் இருந்து நான் தடம் மாற மாட்டேன் என்கிற ஒற்றை வார்த்தை சொல்லி, மிகப்பெரிய கவுரவத்தை கொடுத்திருக்கிறீர்கள். அந்த கௌரவத்திற்கு நான் தகுதியானவனா என்பது தெரியாது. ஆனால் தகுதிப்படுத்திக் கொள்வேன் என்று சொல்லி மீண்டும் கண் கலங்கினார் அண்ணாமலை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.