சென்னை: நேரடி பணி நியமனங்களின்போது ஊழல் இல்லாத அளவுக்கு வெளிப்படைத் தன்மையை பின்பற்ற வேண்டும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சியில் கோவை மாநகராட்சியில் ஒரே நாளில் 54 இளநிலை உதவியாளர் நியமனமானதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இளநிலை பொறியாளர் தேர்வு நடைமுறையில் மனுதாரர் பங்கேற்காத நிலையில் வழக்கு தொடர முடியாது என நீதிபதி தெரிவித்தார். விளம்பரங்கள் செய்யப்படாததால் தகுதி இருந்தும் தேர்வு நடைமுறைகளில் கலந்து கொள்ள முடியவில்லை என ஈஸ்வரி வழக்கு தொடர்ந்திருந்தார்.