புதுடெல்லி: நமது அண்டை நாடான பாகிஸ்தானில் பல பிரச்சனைகள் தினம் தினம் முளைத்து வருகின்றன. விலைவாசி உயர்வு, நிலையற்ற பொருளாதாரம், பணவீக்கம், உறுதியற்ற அரசியல் தலைமை என ஏகப்பட்ட இன்னல்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் சிக்கித் தவிக்கின்றது. இந்த நிலையில், வியாழக்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தானின் நாணய மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை அடைந்தது. ஒரு டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு ரூ. 255 ஆக குறைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து கடன்களை பெறுவதற்காக பணப்பற்றாக்குறையால் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தான் அரசு நாணய மாற்று விகிதத்தில் அதன் பிடியை தளர்த்திய பின்னர் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பண பரிவர்த்தனை நிறுவனங்கள் புதன்கிழமை முதல் டாலர்-ரூபாய் விகிதத்தின் வரம்பை நீக்கிவிட்டன. மேலும் திறந்த சந்தையில் உள்ளூர் நாணயத்தை மெதுவாகக் குறைக்க அனுமதிப்பதாகவும் அவை கூறின.
மதியம் 1 மணியளவில் பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பு ரூ. 24 சரிந்து, அமெரிக்க டாலருக்கு நிகராக ரூ. 255 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது என்று எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டது.
மேலும் படிக்க | ஒசாமா பின் லேடனைப் போன்றே அதிரடியாய் ISIS தீவிரவாதத்தலைவரை சுட்டுக் கொன்ற அமெரிக்கா
ஐஎம்எஃப் பாகிஸ்தான் அரசிடம், தங்கள் நாணயத்தின் மீதான கட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டு வருமாறும், நாணய விகிதத்தை சந்தை சக்திகள் தீர்மானிக்க அனுமதிக்குமாறும் கேட்டுக் கொண்டது. இந்த நிபந்தனை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. தற்போது நிறுத்தப்பட்டுள்ள 6.5 பில்லியன் டாலர் நிதியைப் பெறுவதற்கான உலகளாவிய அமைப்பின் ஒப்புதலைப் பெற பாகிஸ்தான் முயன்று வருகிறது.
கடந்த ஆண்டு IMF பிணையெடுப்பில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில், இந்த ஆண்டு நிதி வெளியீடு நிறுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் குறைந்த அந்நிய செலாவணி இருப்பு பெரிய அளவிலான உணவு பணவீக்கத்திற்கு வழிவகுத்தது. நாட்டின் சில பகுதிகளில், கோதுமை மாவின் ஒரு பாக்கெட், ரூ. 3,000 வரை விற்கப்படுகிறது. உணவுக்காக மக்கள் போராடும் வீடியோக்களும் உணவு லாரிகளை துரத்தும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.
இது மட்டுமின்றி அடிக்கடி ஏற்படும் மின்தடை காரணமாக நாடு இருளில் மூழ்கியுள்ளது.
“எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அனைவரும் அப்படியே உட்கார்ந்திருக்கிறார்கள். எங்களால் எந்த இயந்திரத்தையும் இயக்க முடியவில்லை” என்கிறார்கள் தொழிற்சாலைகளின் மூதலாளிகள். இந்த மின்தடை மற்றும் விலைவாசி காரணமாக அனைத்து தொழில்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
பாக்கிஸ்தானின் மத்திய வங்கி இந்த வாரமும் வட்டி விகிதங்களை 24 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்த்தியது. அதிகரிக்கும் விலைவாசியை சமாளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது. எனினும், இதுவும் மீண்டும் பொதுமக்களையே பாதித்துள்ளது.
மேலும் படிக்க | உணவு, மின்சாரம் இன்றி தவிக்கும் பாகிஸ்தான்… நாடாளுமன்றமும் செயல்பட முடியாத நிலை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ