ஐதராபாத்: ஷாருக்கான், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்த பதான் திரைப்படம் இந்து அமைப்பினரின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் வசூலில் புதிய சாதனையை படைத்துள்ளது. ஒரே நாளில் 55 கோடி ரூபாய் வசூலித்த பதான் திரைப்படம் மேலும் பல சாதனைகளை சொந்தமாக்கிக் கொண்டு இருக்கிறது. இயக்குனர் ஆனந்த் சித்தார்த் இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோன் ஜான் அப்ரகான் உள்ளிட்டோர் நடித்த பதான் திரைப்படம் உலகம் முழுவதும் நூற்றுக்குக்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பதான் படத்தின் பேஷரம் என்ற பாடலில் தீபிகா படுகோன் கவர்ச்சி நடனம் அடியார்க்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பதான் படம் வெளியான நாளில் இந்து அமைப்பினர் திரையரங்குகள் முன்பு போராட்டங்கள் நடத்தியதோடு கல்விச்சிலும், தீவைப்பிலும், ஈடுபட்டனர். 4 ஆண்டுகளுக்கு பின்னர் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்துள்ள பதான் படத்திற்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் புரிந்ததால் படம் ஓடுமா என்று சந்தேகம் எழுந்தது, ஆனால் பெரும் விவாதங்களுக்கு இடையே இந்த படம் ஒரே நாளில் 55 கோடி ரூபாய் வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது.
நுற்றுக்குமேற்பட்ட நாடுகளில் திரையிடப்பட்ட படம் என்ற சாதனையும் பதான் திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் 5,000 திரையரங்குகளிலும் இந்த பதான் திரைப்படம் வெளியிடப்பட்டு இருப்பது மற்றொரு புதிய சாதனையாகும். பதான் படம் இமாலய வெற்றி பெற்றுள்ள நிலையில் ஷாருக்கான்னை வைத்து அட்லீ இயக்கி கொண்டிருக்கும் ஜவான் படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.