மூன்றரையாண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த இளம்பெண்ணின் வீடு: தந்தை இறந்ததால் தெரியவந்த திடுக்கிடவைக்கும் உண்மை


இளம்பெண் ஒருவரின் தந்தை இறந்துவிட்டதை அவருக்குத் தெரிவிப்பதற்காக அவரது உறவினர்கள் அந்த இளம்பெண்ணின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

அப்போது அவர்கள் கண்ட காட்சி அவர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சர்ரேயிலுள்ள ஏழைகளுக்காக அரசு ஒதுக்கியுள்ள வீடு ஒன்றில் தனியாக வாழ்ந்துவந்துள்ளார் லாரா (Laura Winham, 38) என்ற இளம்பெண்.

கடுமையாக மன நலம் பாதிக்கப்பட்டு, தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக கூறப்படும் லாராவுடைய தந்தை 2021ஆம் ஆண்டு மே மாதம் இறந்துபோனதால், லாராவின் உறவினர்கள் அவரது தந்தையின் மரணம் குறித்து அவருக்கு அறிவிக்க அவர் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்றுள்ளார்கள்.

கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருக்க, கடிதம் போடும் இடைவெளிவழியாக உறவினர் ஒருவர் எட்டிப்பார்க்க, வீட்டுக்குள், போர்வை ஒன்றிற்குள்ளிருந்து பாதம் ஒன்று எட்டிப்பார்ப்பதை கவனித்த அவர் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.

பொலிசார் வீட்டுக்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தபோது, அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் ஒரு காட்சியை கண்டுள்ளார்கள்.

ஆம், லாராவின் உயிரற்ற உடல், காய்ந்து சுருங்கிப்போய் கிடந்திருக்கிறது.

மூன்றரையாண்டுகளாக கவனிக்கபடாமல் விடப்பட்ட லாரா

விடயம் என்னெவென்றால், லாரா 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது காலண்டரில், எனக்கு உதவி தேவை என எழுதியிருக்கிறார். அதற்குப் பிறகு அவரது வீட்டுக்கு வந்த கடிதங்கள், பில்கள் தொடப்படாமல் கிடக்க, உடற்கூறு ஆய்வில் அவர் மூன்றரையாண்டுகளுக்கு முன்பே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

அரசு மருத்துவமனை மற்றும் சமூக சேவை அமைப்புகள் எதுவும் கவனிக்காமல், இறந்து, தோல் சுருங்கி காய்ந்து, எலும்புக்கூடாகிப்போகும் நிலைக்கு விடப்பட்டுள்ளார் லாரா.

லாரா தங்களிடமிருந்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாகவும், அரசின் சமூக சேவகர்களின் கண்காணிப்பில் இருந்த அவரை மருத்துவ அமைப்பும் சமூக சேவகர்களும் கைவிட்டுவிட்டதாக குற்ரம் சாட்டியுள்ளார்கள் அவரது உறவினர்கள்.

மூன்றரையாண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த இளம்பெண்ணின் வீடு: தந்தை இறந்ததால் தெரியவந்த திடுக்கிடவைக்கும் உண்மை | The Startling Truth Revealed By The Father S Death

Photograph: Hudgell Solicitors

மூன்றரையாண்டுகளாக, அரசின் உதவி பெறாமல், பில் எதையும் கட்டாமல் ஒரு வீட்டில் ஒரு ஆள் இருப்பதை அறிந்தும், அந்த வீட்டுக்குச் சென்று யாரும் சரியாக ஆய்வுகூட செய்யப்படவில்லை என்று கூறும் அவர்கள், அப்படி யாராவது சென்று பார்த்திருந்தால் லாராவுக்கு இப்படி ஒரு கொடூரமான முடிவு ஏற்பட்டிருக்காது என்கிறார்கள்.

வரும் திங்கட்கிழமை லாராவின் மரணம் குறித்த ஒரு விசாரணை நடத்தப்பட உள்ள நிலையில், சமூக சேவகர்கள் முதலானோர் முறையாக செயல்பட்டார்களா என்பதை விசாரிக்கவேண்டும் என லாராவின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.