மறைந்த ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஜூடோ ரத்தினம்தென்னிந்திய சினிமாவில் 1966 ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரை ஸ்டண்ட் மாஸ்டராக இருந்தவர் ஜூடோ ரத்தினம். தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஸ்டண்ட் அமைத்துள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், விஜயகாந்த் என பல நடிகர்களின் பல்வேறு படங்களுக்கு சண்டைக் காட்சி அமைத்து கொடுத்துள்ளார் ஜூடோ ரத்தினம்.
Siddharth: ஷர்வானந்த் நிச்சயதார்த்தத்தில் ஜோடியாக பங்கேற்ற சித்தார்த் – அதிதி… அது உண்மைதான் போல!
நேற்று காலமானார்சில படங்களிலும் நடித்துள்ளார் ஜூடோ ரத்தினர். இயக்குநர் சுந்தர் சி நடிப்பில் வெளியான தலைநகரம் படத்தில் கடைசியாக நடித்திருந்தார் ஜூடோ ரத்தினம். இதனை தொடர்ந்து வயது மூப்பு காரணமாக வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார் ஜூடோ ரத்தினம் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Kasthuri: 48 வயதில் பாவாடை தாவணியில் அசத்தும் கஸ்தூரி… லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
ரஜினிகாந்த் அஞ்சலிஇந்நிலையில் ஜூடோ ரத்தினத்தின் உடல் சென்னை வடபழனியில் உள்ள ஸ்டண்ட் நடிகர் சங்க அலுவலகத்தில் ஜூடோ ரத்தினத்தின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு, அவருடன் இணைந்து பணியாற்றிய பிரபலங்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் சண்டைக் கலைஞர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தும் ஜூடோ ரத்தினத்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். Bigg Boss Ayesha: காதலரா? கட்டியணைத்தப்படி ஹார்ட்டினுடன் ரொமான்டிக் போட்டோ வெளியிட்ட பிக்பாஸ் ஆயிஷா!
40க்கும் மேல்ரஜினிகாந்த் நடித்த முரட்டு காளை, நெற்றிக்கண், போக்கிரி ராஜா, பாயும் புலி, கை கொடுக்கும் கை, படிக்காதவன், மிஸ்டர் பாரத், விடுதலை, மனிதன், தர்மத்தின் தலைவன், அதிசய பிறவி, பாண்டியன் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படங்களில் ஜூடோ ரத்தினம் சண்டை பயிற்சியாளராக இருந்துள்ளார். இதேபோல் கமல்ஹாசனின் பல படங்களுக்கும் சண்டைக்காட்சிகளை அமைத்து கொடுத்துள்ளார் ஜூடோ ரத்தினம். இந்நிலையில் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். Judo Rathnam: ரஜினி கமலுக்கு ஆக்ஷன் சொல்லிக் கொடுத்தவர்.. ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் திடீர் மரணம்!
ரஜினிகாந்த் புகழாரம்தொடர்ந்து பேசிய அவர், முரட்டுக் காளை படத்தில் ரயில் சண்டை உள்ளிட்ட பல சண்டைக் காட்சிகிள் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும். சண்டை பயிற்சியில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி அதில் வெற்றி பெற்றவர் ஜூடோ ரத்தினம் என தெரிவித்துள்ளார். மேலும் ஜூடோ ரத்தினம் உடன் பணிபுரியும் சக ஸ்டண்ட் கலைஞர்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். ஜூடோ ரத்தினத்தின் மகன் ஜூடோ. கே.கே.ராமுவும் ஸ்டண்ட் மாஸ்டராக உள்ளார். மேலும் ஜூடோ ரத்தினத்தின் பேரன்கள் ஜூடோ லெனின் மற்றும் ஜான் பிரின்ஸ் ஆகியோரும் திரைப்படங்களில் ஸ்டண்ட் கலைஞர்களாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து இழப்புகள்… சோகத்தில் சமந்தா!
Rajinikanth