கரூர் மாவட்டத்தில் ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற இளைஞர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் தாரப்புரத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் ராஜா (23). இந்நிலையில் ராஜா இப்பகுதிக்கு அருகில் காட்டுப்பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு ஆட்டுக்குட்டி 50 அடி ஆழக் கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளது.
இதைப் பார்த்த ராஜா கிணற்றில் இறங்கி ஆட்டுக்குட்டியை மீட்க முயன்றார். ஆனால் ராஜா கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் கிணற்றுப் பகுதிக்குச் சென்ற ராஜா வெகு நேரமாகியும் வராததால் அங்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்பொழுது கிணற்றுக்குள் ஆட்டுக்குட்டி இறந்த நிலையில் மிதந்துள்ளது. மேலும் ராஜாவின் செருப்பு மட்டும் கிணற்றின் மேல் பகுதியில் இருந்ததால் அதிர்ச்சியடைந்து, இது குறித்து முசிறி தீயணைப்பு துறை எனக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீனைப்பு துறையினர் மற்றும் போலீசார், கிணற்றுக்குள் இருந்து நீண்ட நேரத்திற்கு பிறகு ராஜாவை பிணமாக மிட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் ராஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.