புதுடில்லி: லடாக் எல்லையில், இந்திய – சீன வீரர்களுக்கு இடையே வரும் நாட்களில் மேலும் பல மோதல் சம்பவங்கள் அரங்கேற வாய்ப்புள்ளதாக, போலீசார் ரகசிய ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு லடாக்கில் சீன படையினர் அத்துமீறி ஊடுருவியதை அடுத்து, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு தரப்பு வீரர்கள் இடையே கடந்த 2020 மே மாதம் மோதல் ஏற்பட்டது. இதில், இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
இந்த சம்பவத்துக்குப் பின், இருதரப்பு உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் இடையே பல சுற்று பேச்சுகள் நடத்தப்பட்டன.
இதில் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி, பாங்காங் சோ ஏரிக்கரையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் இருந்து இந்திய – சீன படையினர் திரும்பப் பெறப்பட்டனர்.
அடுத்து, கோக்ரா ஹாட்ஸ்பிரிங் பகுதியில் இருந்தும் படைகள் வாபஸ் பெறப்பட்டன. இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் கடந்த மாதம் மீண்டும் மோதல் வெடித்தது. இதில், உயிரிழப்புகள்ஏற்படவில்லை.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், அனைத்து மாநிலங்களின் போலீஸ் தலைவர்களின் கூட்டம், கடந்த 20 – 22 வரை நடந்தது. இதில், அனைத்து மாநிலங்களின் டி.ஜி.பி.,க்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது, லடாக் போலீசார் தரப்பில் இருந்து தொடர்ச்சி 11ம் பக்கம்
ரகசிய ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், ‘வரும் நாட்களில், இந்திய – சீன படையினர் இடையே லடாக் எல்லையில் மேலும் பல மோதல் சம்பவங்கள் அரங்கேற வாய்ப்புள்ளது’ என கூறப்பட்டுள்ளது. எல்லையில் உளவுத்துறை மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
‘சீனாவின் உள்நாட்டு நிர்ப்பந்தங்கள் மற்றும் அவர்களின் பொருளாதார நலனை கருத்தில் வைத்து எல்லையில் ராணுவ கட்டமைப்புகளை உருவாக்கும் பணியை சீன ராணுவம் தொடர்ந்து மேற்கொள்ளும். இதன் காரணமாக, எல்லையில் சீனாவுடனான கைகலப்புகள் முற்றும்’ என, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக நம் ராணுவ தரப்பில் இருந்து பதில் அளிக்கப்படவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement