இளவரசர் ஹரி ராஜ குடும்பத்தவர் என்பதாலும், மேகன் ஒரு ராஜ குடும்பத்தவரின் மனைவி என்பதாலும்தான் அவர்களுக்கு மரியாதை என்று கூறியுள்ளார் அமெரிக்க ஊடகவியலாளர் ஒருவர்.
இளவரசர் ஹரியும் மேகனும் அமெரிக்காவிலிருந்து வெளியேறவேண்டும்
பிரபல அமெரிக்க ஊடகவியலாளரும், ராஜ குடும்ப நிபுணருமான Kinsey Schofield, ஹரியும் மேகனும் அமெரிக்காவிலிருந்து வெளியேறவேண்டும் என எச்சரித்துள்ளார்.
பொதுமக்களிடையே ஹரி மேகன் தம்பதியருக்கு ஆதரவு குறைந்துவருவதை சமீபத்திய கருத்துக்கணிப்பு ஒன்று உறுதிசெய்துள்ள நிலையில், ஹரியும் மேகனும் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்லவேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
அமெரிக்கர்களின் விருப்பம்
நீங்கள் கேட்க விரும்பாத ஒரு விடயத்தைக் கூறப்போகிறேன் என்று கூறியுள்ள Kinsey, இங்கே அமெரிக்காவில் மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்றால், ஹரியும் மேகனும் மன்னிப்புக் கேட்கவேண்டும், மன்னிப்புக் கேட்டுவிட்டு அவர்கள் பிரித்தானியாவுக்குத் திரும்பிச் செல்லவேண்டும்.
அதைத்தான் இங்கே அமெரிக்காவில் நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறோம். இந்த செய்தியை பிரித்தானியர்கள் விரும்பமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆகவே, இப்படி ஒரு செய்தியைக் கொண்டுவந்ததற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்கிறார் Kinsey.
ஹரியும் மேகனும் பிரித்தானிய ராஜ குடும்பத்துடன் தொடர்புடையவர்கள் என்பதால்தான் அவர்களை அமெரிக்கர்களுக்குப் பிடித்தது. ஆகவே, அவர்கள் பிரித்தானிய குடும்பத்துடன் நெருக்கமாக இருப்பதுதான் அவர்களுக்கு மரியாதை என்று கூறியுள்ளார் Kinsey.