சென்னை: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுஇ, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் முடிவடைந்ததும் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 5-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் 10.17 லட்சம் பேர் தங்களது […]