இஸ்ரேலில் உள்ள கிழக்கு ஜெரூசலேத்தில் தீவிரவாதி துப்பாக்கியால் சுட்டதில் பெண் உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.
ஜெரூசலேம் அருகில் உள்ள யூத வழிபாட்டுத் தளத்தில் 21 வயது இளைஞன் ஒருவன் திடீரென துப்பாக்கியால் சுட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
துப்பாக்கியால் சுட்ட நபர் காரில் ஏறி தப்ப முயன்றபோது போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடைபெற்றது.