திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டல் 3 ரூபாய்க்கு பிரியாணி விற்பனை..!!

திருத்தணி சித்தூர் சாலையில் உள்ள அசைவ ஹோட்டலின் 3-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 3 ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என ஓட்டல் உரிமையாளர் டிஜிட்டல் பேனர் மூலம் அறிவிப்பு செய்திருந்தார்.

இதனையடுத்து நேற்று அதிகாலை முதல் அலைமோதிய அசைவ பிரியர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து 3 ரூபாய்க்கு பிரியாணியை வாங்கி உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டும், பார்சல் வாங்கி கொண்டும் சென்றனர்.

இதனால் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.