குடியரசு தின விழாவில் தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாநில வளர்ச்சிக்காக பல்வேறு அரசு துறையில் சிறப்பாக பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்குவது வழக்கம். நேற்று இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பாக சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் மது இல்லாத மாநிலமாக உருவாக்குவோம் என்று ஆட்சிக்கு வருவதற்கு முன் சொன்ன திமுக மது விற்பனையில் வருவாய் ஈட்டியதற்காக கரூர் மாவட்ட நிர்வாகம் பாராட்டு சான்றிதழ் வழங்கியதன் அவலநிலை குறித்து சமூக வலைதளங்களில் திமுக அரசு விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மதுவிலக்கு துறை அமைச்சராக இருப்பதால் டாஸ்மாக் ஊழியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்தனர். பல நெடிஷன்கள் தங்களின் மீம்ஸ் திறமையை சர்ச்சைக்குரிய டாஸ்மாக் ஊழியர் சான்றிதழ் விவகாரத்தில் காட்டி இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ் திரும்பப் பெறப்பட்டுள்ளது. நேற்று முதல் நெடிசன் மற்றும் சமூக ஆர்வலர்களின் விமர்சனத்திற்கு ஆளான திமுக அரசும், கரூர் மாவட்ட நிர்வாகமும் இத்தகைய முடிவை எடுத்துள்ளது. நெட்டிசங்களின் விமர்சனத்திற்கு ஆளான திமுக அரசு விவகாரத்திலும் பின்வாங்கியுள்ளது. இதனையும் விட்டு வைக்காத இணையதள வாசிகள் சான்றிதழ் திரும்ப பெற்றது குறித்து திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.