நியூசிலாந்து : கனமழை – வெள்ளத்தில் மிதக்கும் சாலைகள்

நியூசிலாந்தில், கொட்டித் தீர்த்த அதி கனமழையால் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஆக்லாந்து சுற்றியுள்ள புறநகர் பகுதியில் இடைவிடாது பெய்த மழையால், நெடுஞ்சாலைகள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கி விட்டன. இதனால், வாகனங்கள் கடந்து செல்ல முடியாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கனமழை-வெள்ள பாதிப்பால் ஆக்லாந்து நகர நிர்வாகம் அவசர நிலையை பிறப்பித்துள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். கனமழையால், ஆக்லாந்து நகர சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டு, விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.