பொருளாதார சக்தியின் புதிய மையங்களுக்கான வளர்ச்சியை ஒருவராலும் தடுத்து நிறுத்த முடியாது: ரஷியா

மஸ்சாவா,

உக்ரைனில் நடந்து வரும் போரானது 11 மாதங்களை கடந்து நீடித்து வருகிறது. எனினும், ரஷியா தனது படையெடுப்பை நிறுத்தவில்லை. தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

அந்நாடு ரஷியாவின் பல நகரங்களை கைப்பற்றுவதும், பின்னர் அவற்றை உக்ரைன் மீட்டெடுப்பதும் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், ரஷியாவின் வெளியுறவு மந்திரி செர்கெய் லாவ்ரோவ் எரித்ரியா நகரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போது, அமெரிக்காவை சாடி பேசினார். பன்முக தன்மை கொண்ட உலகை நிறுவுவது என்பது ஒரு செயல் நோக்கம் மற்றும் தடுத்து நிறுத்த முடியாத நடைமுறையாக இருக்கும்.

அமெரிக்காவால் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட, தற்போது, நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் இணைந்த மேற்கத்திய நாடுகள் இந்த நடைமுறையை தலைகீழாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்று கூறினார். ஆனால், இந்த முயற்சிகள் அனைத்தும் பயனற்று போகும் என்றும் கூறியுள்ளார்.

அறிவுரை தருவதற்காக வர கூடிய எந்த நாட்டு தலைவர்களின் பயணமோ அல்லது மேற்கத்திய நாடுகளின் ராணுவம் மற்றும் ராணுவம் அல்லாத போர்களும் (உக்ரைனில் நடப்பது), பொருளாதார ஆற்றல், நிதி மற்றும் அரசியல் தாக்கங்களை ஏற்படுத்த வல்ல புதிய மையங்கள் உருவாவதில் இருந்து, அவற்றின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது.

சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் முன்பே பல வகைகளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் உறுப்பினர்களாகி விட்டன என அவர் கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.